← Joshua (19/24) → |
1. | இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது. |
2. | அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா, |
3. | ஆத்சார்சூகால், பாலா, ஆத்சேம், |
4. | எல்தோலாத், பெத்தூல், ஒர்மா, |
5. | சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார் சூசா, |
6. | பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று. |
7. | மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. |
8. | இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம். |
9. | சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள். |
10. | மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது. |
11. | அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம். |
12. | சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி, |
13. | அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம். |
14. | அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும். |
15. | காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லெகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும், |
16. | செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம். |
17. | நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது. |
18. | இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், |
19. | அப்பிராயீம், சீகோன், அனாகராத், |
20. | ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், |
21. | ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே. |
22. | அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு. |
23. | இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம். |
24. | ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது. |
25. | அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், |
26. | அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று, |
27. | கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும், |
28. | எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம். |
29. | அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும். |
30. | உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு. |
31. | இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம். |
32. | ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது. |
33. | நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின்மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும். |
34. | அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும். |
35. | அரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், |
36. | ஆதமா, ராமா, ஆத்சோர், |
37. | கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், |
38. | ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்படப் பத்தொன்பது. |
39. | இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம். |
40. | ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது. |
41. | அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், |
42. | சாலாபீன், ஆயலோன், யெத்லா, |
43. | ஏலோன், திம்னாதா, எக்ரோன், |
44. | எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், |
45. | யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன், |
46. | மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே. |
47. | தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள். |
48. | இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம். |
49. | தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள். |
50. | எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான். |
51. | ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள். |
← Joshua (19/24) → |