← Ezra (2/10) → |
1. | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும், |
2. | செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூடத் திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது: |
3. | பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். |
4. | செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். |
5. | ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர். |
6. | யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். |
7. | ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். |
8. | சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர். |
9. | சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர். |
10. | பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர். |
11. | பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர். |
12. | அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். |
13. | அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். |
14. | பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர். |
15. | ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர். |
16. | எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர். |
17. | பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். |
18. | யோராகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர். |
19. | ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர். |
20. | கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர். |
21. | பெத்லெகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர். |
22. | நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர். |
23. | ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர். |
24. | அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர். |
25. | கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். |
26. | ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர். |
27. | மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர். |
28. | பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர். |
29. | நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர். |
30. | மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர். |
31. | மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். |
32. | ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். |
33. | லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். |
34. | எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர். |
35. | சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர். |
36. | ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். |
37. | இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர். |
38. | பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர். |
39. | ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர். |
40. | லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர். |
41. | பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர். |
42. | வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர். |
43. | நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர், |
44. | கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர், |
45. | லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர், |
46. | ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர், |
47. | கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர், |
48. | ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர், |
49. | ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர், |
50. | அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர், |
51. | பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர், |
52. | பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர், |
53. | பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர், |
54. | நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே. |
55. | சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர், |
56. | யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர், |
57. | செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே. |
58. | நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். |
59. | தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்: |
60. | தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். |
61. | ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே. |
62. | இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். |
63. | ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். |
64. | சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். |
65. | அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். |
66. | அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து, |
67. | அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. |
68. | வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். |
69. | அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். |
70. | ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள். |
← Ezra (2/10) → |